வியாழன், 27 ஆகஸ்ட், 2015

11.கற்பூரம்

கருப்பூரத்தினால் 
  • கிருமி,
  • நீரேற்றம்,
  • இசிவு,
  • சன்னிபாதம்,
  • வாதாலசகம்,
  • தீப்புண்,
  • கோரசுரம்.
  • சர்த்தி,
  • பைத்தியம்,
  • சிலேத்துமவாதம்,
  • கர்ண சூலை,
  • சிலேத்தும ரோகம்.ஆகியன நீங்கும்.
  • அவிழ்தங்களில் கூட்டிக் கொடுக்க ஐம்புலன்களின் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  • மூளைக்கு உஷ்ணத்தைத் தாக்கி நித்திரையை பலப்படும்.
  • அளவு அதிகப்படின் நித்திரை பலப்படும்.
  • உதர பீனிசம்,
  • உதிரக்கக்கல்,
  • உஷ்ணத்தை பற்றிய பேதி,
  • வியர்வை,
  • தாகம்,
  • ஈரல்களிலுண்டான புண்கள்,
  • இருமல்,
  • அஸ்திசுரம்,
  • நீர்க்கடுப்பு,முதலியவை நீங்கும்.     

சனி, 22 ஆகஸ்ட், 2015

10.பச்சை கற்பூரம்.

பச்சை கற்பூரத்தால் 

  • எட்டுவித குன்மங்கள்,
  • கீல்களில் குத்தல்,
  • வாத நோய்,
  • சீழப் பிரமேகம்,
  • சிலேஷ்ம கோபம்,இவைகள் நீங்கும். 

புதன், 1 ஏப்ரல், 2015

9.அமுரி உப்பு.


  • மாந்தர்களின் ஜடராக்கினி யுவர்ச்சுவையை உடைய சிறுநீர் உப்பினால் காணாக்கடி விஷம்.
  • சோபை ,
  • வாத தோஷம் தீரும்.
  • இருமல் 
  • சுவாசம் 
  • அசிர்கரம் 
  • மேக மூத்திரம் 
  • கிரந்தி 
  • விரணம்  ஆகியவை போகும்.
  • நசியமிட ஜுரம் 
  • அபாஸ்மாரம்
  • சன்னி யாசம் 
  • சர்வ விஷம் 
  • விஷ ஜுரம் ம் முதலியவைகள் நீங்கும்.
  • அமுரியை கொண்டு கழுவினால் முகம்,விழி,செவி முதலிய இடங்களில் உண்டாகும் கட்டிகள் விலகும்.
  • இன்னும் காய சித்திக்கும் ஆகும் என்க.  

செவ்வாய், 31 மார்ச், 2015

8.ஏகம்பசாரம்.




  • ஏகம்பசாரம் இதனை மருந்துக்கு பயன் படுத்துவதில்லை.
  • பெரும்பாலும் வாத (ரசவாத )தொழிலுக்கு பயன் படுத்துவதாக சில நூல்களில் கூறப்பட்டுள்ளது.
  • இது சில எரிமலைகளில் நடு இரவில் ஒருவித அதிர்ச்சி உண்டாகி அதிலிருந்து இந்த உப்பு உண்டாகிறது.இது கடைகளில் கிடைக்காது.ஆங்கிலேய இரசாயன தொழிற் சாலைகளில் அதிகம் செலவு செய்து இந்த உப்பை சேகரிப்பது உண்டு.இந்த உப்புடன் வெடியுப்பு கூட்டி நன்கு அரைத்து படிகாரத்திற்க்கு கவசம் கட்டி மண் சீலை செய்து புடமிட கட்டும்.இதை செம்பில் கொடுக்க ஊறல் அற்று பொன்னாகும்.
      

7.வெங்காரம்


  • வெங்காரத்தால் தவளை சொறி புடை,
  • அஷ்ட குன்மம்,
  • தினவு,
  • ரத்த மூலம்,
  • ஒழுக்கு கிரகணி,
  • அஸ்மரி பங்கு வாதம்,
  • தந்த நோய்,நாள வலியைத் தடுக்கின்ற மூத்திர கிரிசரங்கள்,
  • கபாதிக்கம்,
  • புழு பாம்பு விஷம்,
  • சன்னி பாதம்,இவைகள் விலகும். 

6.கெந்தியுப்பு.


  • கெந்தியுப்பால் அதி தூல ரோகத்தையும்,
  • குட லண்ட வாதத்தையும், போக்கும்.
  • ஆனால் வெப்பத்தை யுண்டாக்கும்.  

5.வளையலுப்பு.


  • வளையலுப்பால் அந்திர பித்தவாதம்,
  • வாத பித்தம்,
  • இரைப்பு,
  • வயிற்று நோய்,
  • கீழ் பிடிப்பு,
  • ஜுரம்,
  • பீலிகம்,இவைகளை நீக்கும்.


4.எவச்சாரம்.


  •  எவச்சாரத்தால் விரணப் பிரமேகம்,
  • கள ஓகம்,
  • ஜிக்கு வலாஜகம்,
  • தாலுகள சுண்டிகம்,
  • ஊர்த்வகுதம்,
  • கப விருத்தி,
  • சுவாசம்,
  • காசம்,
  • மகந்தர விரணம்,
  • செந்து விஷம் (ஜந்து விஷம் ),
  • வீக்கம்,
  • வாத கிரகணி,
  • எட்டு வித வயிற்று வலி,
  • குத்தல்,
  • அதி தூலம்,
  • சுவாலித வாதம்,
  • சலோ தரம்,
  • விசால ஜகம்,
  • கப நோய்,
  • மூர்த்திரோர் சங்கம்,
  • வாத பிலிகம்,இவைகளை ஒழிக்கும்.

3.நவச்சாரம்.(கிரக சாரம்,சாரம்.)


  • நவச்சாரத்தால் வயிற்று வலி,
  • குடற் குத்தல்,
  • பெருவயிறு 
  • அஸ்மரி,
  • சருமத்தில் புலால் வாசம்,
  • திரிதோசம்,
  • வாத நோய்,இவைகளை நீக்கும்.

2.பூனீறு(பூநீரு, பூநீர்,பூனீர்,)






  •  பூநீற்றால் கடுவன்,
  • சீதளம்,
  • வாயு,
  • வலி,
  • குன்மம்,முதலிய ரோகங்கள் நீங்கும்,
  • இன்னும் இதனால் பேதியாகும்.

1.வழலை இதுவே கற்சுண்ணம்.(calcium carbonate )





  • கற்சுண்ணத்தால் அன்னம் ஜீரணம் ஆவதும் தவிர 
  • குடலில் பிடித்த நெய்சிக்கு ,
  • பேதி,
  • வாத கிரிசரம்,
  • பூரான் கடி முதலிய பலவிஷம்,
  • காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம்,
  • நெருப்பு சுட்டபுண்,
  • சிரங்கு,
  • தினவு,
  • அழிந்த விரணம்,
  • தலை நோய்,
  • மண்டைப் புற்று,
  • கள நோய்,
  • சன்னி,இவை நீங்கும்.
  • சுக்கிலதிற்கு பலமும்,
  • தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும்.

கார சார லவணம் :25.


  1. வழலை 
  2. பூநீறு 
  3. நவசாரம் 
  4. எவச்சாரம் 
  5. வளையலுப்பு 
  6. கெந்தியுப்பு 
  7. வெங்காரம் 
  8. ஏகாம்பச்சாரம்.
  9. அமுரி உப்பு 
  10. பச்சை கற்பூரம் 
  11. கற்பூரம் 
  12. சத்திசாரம் 
  13. வெடி உப்பு 
  14. மீனம்பர் 
  15. பென்னம்பர் 
  16. சவுட்டுப்பு 
  17. நில உப்பு 
  18. இந்துப்பு 
  19. சிந்துப்பு 
  20. கல்லுப்பு 
  21. காசிச் சாரம் 
  22. பிடா லவணம் 
  23. அட்டுப்பு 
  24. சீனம் 
  25. கடல் நுரை .