செவ்வாய், 19 ஜூலை, 2016

25.கடல் நுரை,(காரசார லவணம் 25 ல்),


இது பாறைபோல் நீரில் மிதக்கும் (ராமர் பாலம் கல் ) இதுவே அசல் கடல் நுரை.




  • கடல் நுரையால் காது வலி 
  • சீழ் வடிதல் ,
  • நேத்ர நோய் ,
  • சொறி,
  • சிரங்கு,
  • உடல் எரிச்சல்,
  • உட்சூடு முதலியன குணமாகும்.




திங்கள், 18 ஜூலை, 2016

24.சீனம்.படிகாரம்,வெண் புளி,படிகி,சீனிக்காரம்.(காரசார லவணம் 25 ல்),




  • சீனாகாரத்தால் பல்லரணை,
  • உதிரப் பெருக்கு ,
  • வாந்தி ,
  • ஒக்காளம்,
  • பேதி ,
  • நீர் சுருக்கு 
  • உள்ளுறுப்பு ரணங்கள்,
  • அழுகல் அகற்றி.
  • குன்மம்.
  • வாத பிணி,
  • உட் சூடு.நீங்கும்.




23.அட்டுப்பு.(காரசார லவணம் 25 ல்),




  • அட்டுப்பினால் பைத்தியம்,
  • குத்தல் (சூலை ),
  • வாந்தி,
  • அரோசகம் முதலியவை போகும்.

22.பிடா லவணம்.(காரசார லவணம் 25 ல்),




  • பிடா லவணத்தால் அதிக நீரும்.
  • மந்தமும் போகும் .
  • பசி அதிகரிக்கும்.

21.காசிச் சாரம்.(காரசார லவணம் 25 ல்),

போகர் காரசார லவணம் 25 கூறி உள்ளார்.அவற்றில் ஒன்று இது.இதன் பயன்பாடு ,வைப்பு முறை (செயற்கையாக செய்யும் பாகம் ) கூறப்படவில்லை.அதனால் இந்த உப்பு தற்காலத்தில் கிடைப்பதில்லை.

20.கல்லுப்பு ,(காரசார லவணம் 25 ல்),



  • கல்லுப்பினால் கபம் ,
  • குத்தல் ,
  • அருசி ,
  • பித்தம் ,
  • வாந்தி ,
  • உஷ்ண வாய்வு,
  • எட்டு வித குன்மம்,
  • வாதநோய்,
  • நாவறட்சி ,
  • மலபந்தம் ஆகியன நீங்கும் .


19.சிந்துப்பு. (காரசார லவணம் 25 ல்).



இது இந்துப்பு வர்ணத்திலும் குணத்திலும் ஒன்று பட்டு இருக்கும்.ஆனால் ரத்த சிவப்பு வர்ணத்தில் இருக்கும்.

  • சிந்துப்பினால் எட்டு வகை குன்மம்.
  • அலசம் 
  • அசிர்க்கரம்,
  • கப பித்தம்,
  • கபாதிக்கம்,
  • நரம்புக் கிரந்தி ,
  • திரிதோஷம் ,
  • மலபந்தம்,
  • விஷம் ,
  • விஷம சுக்கிலம்,
  • கரப்பான் நீங்கும்.
  • தலை,விழி,நாவு,தந்தமூலம்,காது,கழுத்து,கண்டம்,யோனி,முதலிய இடங்களில் காணுகிற நோய்களை போக்கும் .
  • ரத்த மூலம்.
  • குத்தல்,
  • வாத கடுப்பு,
  • நேத்திர காசம் போகும்.